இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையின் 50வது ஆண்டு நிறைவு
May 23 , 2024 188 days 218 0
1974 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று, இந்திய நாடானது “ஸ்மைலிங் புத்தா” (சிரிக்கும் புத்தர்) நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட தனது முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நடத்தியது.
இதன் மூலம் இந்தியா அணுசக்தி திறன் கொண்ட நாடுகளின் குழுமத்தின் நுழைந்தது.
சிரிக்கும் புத்தா நடவடிக்கையுடன், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளைத் தவிர்த்து, அணுகுண்டு சோதனை நடத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, 1970 ஆம் ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று விமர்சனங்கள் எழுந்தன.
1998 ஆம் ஆண்டில், இந்தியா மீண்டும் ஒரு முறை சக்தி நடவடிக்கை என்ற பெயரில் பொக்ரானில் தொடர்ச்சியான அணுசக்திச் சோதனைகளை நடத்தியது.