இந்தியாவின் முதல் அரசு உரிமைப் பெற்ற பசுமைப் பத்திரங்கள் கட்டமைப்பு
November 15 , 2022 742 days 381 0
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம், இந்தியாவின் முதல் அரசு உரிமைப் பெற்ற பசுமைப் பத்திரக் கட்டமைப்பிற்கு தனது ஒப்புதலை அளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP 26 என்ற மாநாட்டில் பிரதமர் அவர்கள் கூறியபடி, “பஞ்சாமிர்த்” என்பதன் கீழ் இந்தியாவின் உறுதிப்பாடுகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்தக் கட்டமைப்பு இயங்கி வருகிறது.
பசுமைப் பத்திரங்கள் நிறுவனங்கள், நாடுகள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களால் நேர்மறையான சுற்றுச்சூழல் அல்லது பருவநிலை பலன்களைக் கொண்ட திட்டங்களுக்கு பிரத்தியேகமாக நிதியளிப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானக் கொடுப்பனவுகளை அளிப்பதற்காகவும் வழங்கப்படுகின்றன.
இவற்றுள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தூய்மையான போக்குவரத்து மற்றும் பசுமைத் தரக் கட்டிடங்கள் போன்றவை அடங்கும்.
இந்தப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் பசுமைத் திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.