‘A1 வகைப்பாட்டைச்’ சேர்ந்த நாட்டின் முதல் ஆற்றல் திறன்மிகு (Energy efficient) இரயில் நிலையாக தெலுங்கானாவில் உள்ள காசேகுடா (Kacheguda) இரயில் நிலையம் புகழ் அடைந்துள்ளது.
தென் மத்திய இரயில் மண்டலத்தின் ஹைதராபாத் பிரிவின் கீழ் செயல்படும் இந்த இரயில் நிலையம் 100 சதவீதம் திறனான ஆற்றல் பயன்பாட்டை அடைந்துள்ளது.
காசேகுடா இரயில் நிலையம் ஆனது 100 வருட பழமையான இரயில் நிலையமாகும்.
பிரம்மிக்க வைக்கும் இந்த இரயில் நிலையமானது 1916-இல் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமாக இருந்த மிர் உஸ்மான் அலிகான் ஆட்சி காலத்தில் நிஜாமின் உத்திரவாத மாநில இரயில்வே அமைப்பால் கட்டப்பட்டது.