இந்தியாவின் முதல் ஈரநில நகரம்
October 20 , 2023
442 days
838
- இராஜஸ்தான் மாநில அரசானது, உதய்பூர் நகரை நாட்டின் முதல் ஈரநில நகரமாக மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- உலகளவில் சில நகரங்கள் மட்டுமே இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
- இந்த நகரம் ஆனது, பிச்சோலா, ஃபதே சாகர், ரங் சாகர், ஸ்வரூப் சாகர் மற்றும் தூத் தாலை ஆகிய ஐந்து பெரிய ஏரிகளால் சூழப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் தேசிய ஏரிகள் வளங்காப்புத் திட்டத்தின் (NLCP) புனரமைப்புத் திட்டத்தில் உதய்பூர் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
- தற்போது, உலகம் முழுவதும் உள்ள 17 நாடுகளில் 42 ஈரநில நகரங்கள் உள்ளன.
- சீனா அதிக பட்சமாக அத்தகைய 13 ஈர நில நகரங்களைக் கொண்டுள்ளது.
Post Views:
838