TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ‘உலக பாரம்பரிய நகரம்’

September 4 , 2017 2672 days 1199 0
  • குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரை 'உலக பாரம்பரிய நகரம்' என யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் இந்த பெயரைப் பெறும் முதல் நகரம் இதுவாகும்.
  • ஆசிய அளவில் இந்த அங்கீகாரத்தைப் பெறும் மூன்றாவது நகரம் இதுவாகும்.
  • யுனெஸ்கோ அமைப்பு இந்நகரத்தை ‘உலக பாரம்பரிய நகரம்’ என ஜூலை மாதம் 8-ஆம் தேதியன்று போலந்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது அறிவித்தது.
  • உலக பாரம்பரியச் சின்னங்ககளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் மொத்தம் 36 கலாச்சார சின்னங்கள் உள்ளன - 28 கலாச்சார சின்னங்கள் , 7 இயற்கைச் சின்னங்கள் , 1 கலாச்சார மற்றும் இயற்கைச் சின்னம்.
  • 15 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட, அகமதாபாத் நகரம், சபர்மதி ஆற்றின் கிழக்கு கரையில் வளமான கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது.
  • அகமதாபாத் நகரில் மொத்தம் 28 கலாசாரச் சின்னங்கள் இந்தியாவின் மத்தியத் தொல்லியல் துறையால் (Archaeological Survey of India - ASI) பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • யுனெஸ்கோ தலைமை இயக்குனர் : இரினா பொகோவா (2009- தற்போது வரை )
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்