இந்தியாவின் முதல் உள்நாட்டு லித்தியம் இரும்பு மின்கலத் திட்டம்
June 13 , 2018 2356 days 767 0
அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (Council of Scientific & Industrial Research - CSIR) ஆய்வகமானது RAASI சோலார் ஆற்றல் எனும் தனியார் நிறுவனத்தோடு இந்தியாவின் முதல் லித்தியம்-இரும்பு (Li-ion) மின்கலத் திட்டத்தின் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது தமிழ்நாட்டின் காரைக்குடியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் மத்திய மின்-வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் (Central Electro Chemical Research Institute - CECRI) கையெழுத்திடப்பட்டுள்ளது.
CECRI ஆனது CSIR-ன் பிற சகோதரி ஆய்வகங்களுடன் இணைந்து லித்தியம் - இரும்பு கலன்களின் உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் RAASI குழுமமானது பெங்களூருவிற்கு அருகாமையில் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லித்தியம்-இரும்பு கலன்கள் உற்பத்தி வசதியை அமைக்கும்.