இண்டஸ்இண்ட் வங்கியானது இண்டஸ்இண்ட் பேங்க் நெக்ஸ்ட் (IndusInd Bank Nexxt) என்றழைக்கப்படும் இந்தியாவின் முதல் பொத்தான்களுடன் கூடிய ஊடாடும் கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய கடன் அட்டையைப் பயன்படுத்தி எப்படி பணம் செலுத்துவது என்பதில் பல விருப்பத் தேர்வுகளை அளிக்கிறது.
இந்த அட்டையானது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கை தலைமையகமாகக் கொண்ட டைனமிக் இன்க் என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இது விற்பனை செய்யும் இடத்தின் (POS - Point of Sale) முனையத்தில் மூன்று பணவழங்கீட்டு விருப்பத் தேர்வுகளை நெகிழ்வுத் தன்மையுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
கடன்
பரிவர்த்தனைகளை 4 கால அளவில் எளிய மாதத் தவணைகளாக மாற்றும் வசதி (6,12, 18, 24 மாதங்கள்)
வெகுமதி புள்ளிகளை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துதல்
போன்றவற்றை வெறுமனே அட்டையில் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் தேர்வு செய்ய முடியும்.