TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கடற் காற்றாற்றல் திட்டம்

April 24 , 2018 2410 days 898 0
  • மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் அமைச்சகத்தின் (Ministry of New and Renewable Energy-MNRE) கீழ் செயல்படும் காற்று ஆற்றலுக்கான தேசிய நிறுவனமானது (National Institute of Wind Energy NIWE) இந்தியாவின் முதல் கடற் காற்றாற்றல் திட்டத்திற்கு (offshore wind energy project) விருப்ப வெளிப்பாட்டை (Expression of Interest-EoI) வெளியிட்டுள்ளது.
  • குஜராத் மாநிலத்தின் கடல் பகுதியில் காம்பட் வளைகுடாவில் (Gulf of Khambat) 1000 மெகாவாட்  (1 ஜிகா வாட்) கடற் காற்றாலை ஆற்றல் உற்பத்தி திட்டத்தை ஏற்படுத்துவதற்கு கடற் காற்றாற்றல் திட்ட மேம்பாட்டாளர்களுக்காக இந்த விருப்ப வெளிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் கடற் காற்றாற்றல் உற்பத்தி திட்டத்தின் அறிவிப்பின் மூலம் மத்திய புதிய மற்றும புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் அமைச்சகம் இந்தியாவில் கடல் காற்றாற்றல் உற்பத்தி துறையை மேம்படுத்த முயற்சி செய்கின்றது.
  • இந்த கடல் காற்றாற்றல் உற்பத்தியானது இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பை (energy security) அடைய உதவி செய்யும். மேலும் பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டத்தின் இலக்குகளை (National Action Plan for Climate Change-NAPCC) அடைய உதவும்.
  • தேசிய கடல் காற்று ஆற்றல் கொள்கையின் (National Offshore Wind Energy Policy) கீழ் சென்னையில் உள்ள காற்று ஆற்றலுக்கான தேசிய நிறுவனமானது     கடற் காற்றாற்றல் திட்ட இடங்களின் இறுதி ஏலத்திற்கு முன்பு அவ்விடத்தை கணக்காய்வு செய்ய மற்றும் அத்தியாவசியமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான முதன்மை நிறுவனமாகும்.
  • காற்று ஆற்றலுக்கான தேசிய நிறுவனமானது கடற் காற்றாற்றல் உற்பத்தி திட்ட மேம்பாட்டிற்கு தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களின் கடற்பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.
  • மேலும் காற்று ஆற்றலுக்கான தேசிய நிறுவனமானது காற்று மூல ஆதாரங்களின் அளவீட்டினிற்காக இந்தியாவின் முதல் கடற் லைடார் கருவியை காம்பாட் வளைகுடாவில் பொருத்தியுள்ளது. மேலும் 2018 ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டு கடற்பகுதியில் இரண்டாவது  லைடார் சாதனத்தை பொருத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்