மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தியில் கடல் வளம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தினைப் பாதுகாப்பதற்காக வேண்டி நாட்டின் 'முதல்' கடல் சார் வளங்காப்பு படையைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இது பவளப்பாறைகள், கடல் புல் மற்றும் பிற கடல் தாவரங்கள் மற்றும் பல்வேறு விலங்கினங்கள் போன்ற விலைமதிப்பற்ற கடல் சார் பல்லுயிர்களின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தும்.
இந்தப் படையானது கடல் சார் விலங்குகளின் கடத்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற கடல்சார் உயிரினங்கள் தொடர்பான பல குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அதனை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றில் ஈடுபடும்.
உள்ளூர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 12 பேர் கடல் சார் உயிரினக் கண்காணிப்பாளர்கள் படையில் தற்போது இராமநாதபுரத்தில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.