இந்தியாவின் முதல் கலப்பின ஆய்வு ஏவுகலமானது, செங்கல்பட்டில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
மார்ட்டின் அறக்கட்டளை என்ற அமைப்பானது டாக்டர் A.P.J. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் விண்வெளி மண்டலம் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து, 2023 ஆம் ஆண்டு டாக்டர் A.P.J. அப்துல் கலாம் செயற்கைக் கோள் ஏவுகல திட்டத்தினை அறிமுகப் படுத்தியது.
வானிலை, வளிமண்டல நிலவரங்கள் மற்றும் கதிர்வீச்சு ஆகியவை குறித்த ஆராய்ச்சிக்கு இந்த ஏவுகலத்தினைப் பயன்படுத்தலாம்.