இந்தியாவின் முதல் காற்று - சூரியசக்தி கலப்பு மின் நிலையம்
June 3 , 2022 907 days 588 0
அதானி ஹைப்ரிட் எனர்ஜி ஜெய்சால்மர் ஒன் லிமிடெட் நிறுவனமானது, ராஜஸ்தானின்ஜெய்சால்மர் நகரில் 390 மெகாவாட் திறனுள்ள காற்றாலை-சூரியசக்தி கலப்பு மின் நிலையம் தொடங்கியுள்ளது.
இந்த ஆலை இந்தியாவின் முதல் கலப்பு காற்றாலை-சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் நிலையமாகும்.
சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் உற்பத்தியை இணைக்கும் கலப்பு மின் உற்பத்தி நிலையமானது, மின் உற்பத்தி இடைநிலைத் தடையை நீக்கி, அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மிகவும் நிலையான ஒரு வாய்ப்பினை வழங்குவதன் மூலம் புதுப்பிக்கத் தக்க ஆற்றலின் முழுத் திறனையும் வெளிக் கொணர்கிறது.