இந்தியாவின் முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி - 2022/2023
September 3 , 2022 814 days 442 0
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) மதிப்பீடுகளை வெளியிட்டது.
இந்தியாவின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஒரு மேல் நோக்கிய நகர்வினைக் குறிப்பதோடு அது 13.5% என்ற அளவில் வளர்ந்து வருகிறது
பெருந்தொற்றிற்குப் பிந்தையப் பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருகிறது.
எவ்வாறாயினும், இந்திய ரிசர்வ் வங்கியின் கணித்துள்ள 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான 16.2% GDP வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இந்த GDP வளர்ச்சியின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைவாக உள்ளது.
முந்தைய காலாண்டில் அதாவது 2022 ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி-மார்ச் காலத்துடன் இதை ஒப்பிடுகையில் ஏப்ரல்-மே-ஜூன் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவானது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
அதில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1% மட்டுமே வளர்ச்சியடைந்தது
கடந்த ஆண்டு இதே காலாண்டில், அதாவது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே-ஜூன் காலத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 20.1 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
இருப்பினும், பெருந்தொற்று ஏற்பட்ட ஆண்டில் உருவான பொருளாதாரச் சுருக்கம் காரணமாக இந்த எண்ணிக்கை பெரிதாக்கப் பட்டது.
இந்தக் காலாண்டில், தனியார் நுகர்வு கிட்டத்தட்ட 26 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
தேசியப் புள்ளியியல் அலுவலகமானது ரங்கராஜன் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் (MoSPI) கீழ் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) மற்றும் மத்தியப் புள்ளியியல் அலுவலகம் (CSO) ஆகியவற்றை இணைத்துத் தேசியப் புள்ளியியல் அலுவலகமானது உருவாக்கப் பட்டது.