மத்திய எருதுகள் ஆராய்ச்சி நிறுவனமானது (Central Institute for Research on Buffaloes-CIRB) இந்தியாவில் முதல் முறையாக குளோனிங் முறை மூலம் அஸ்ஸாமிய ஆண் எருதுக் கன்று (Assamese buffalo male calf) ஒன்று பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் குழுவானது தனித்துவ முறைகளைப் பயன்படுத்தி சாதாரணப் பிரசவத்தின் மூலம் “சச் கவுரவ்” (Such Gaurav) எனும் அஸ்ஸாமிய எருமைகளின் முதல் குளோனிங் கன்றை (Clone Calf) உருவாக்கியுள்ளனர்.
P.S யாதவ் தலைமையிலான மத்திய எருதுகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் குளோனிங் குழு இந்த சாதனையைப் புரிந்துள்ளது.
அஸ்ஸாமில் உள்ள ஹை-டெக் சச் டெய்ரி பண்ணையில் (Hi Tech Sach Dairy Farm) முர்ரா வகை எருமைக்கு இந்த குளோனிங் கன்று பிறந்துள்ளது; பண்ணைக் களத்தில் பிறந்த முதல் குளோனிங் கன்று இதுவேயாகும்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்குழுவின் (ICAR- Indian Council of Agricultural Research) - மத்திய எருதுகள் ஆராய்ச்சி நிறுவனத்தால் குளோனிங் முறை மூலம் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது குளோனிங் ஆண் எருது இதுவாகும்.
இதற்கு முன் 2015- ல் கவுரவ் எனும் ஹிசார் வகை ஆண் எருது குளோனிங் முறை மூலம் உருவாக்கப்பட்டது.
குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இக்கன்றின் மரபியல் தோற்றமானது பெற்றோர் சந்ததி சரிபார்ப்பிற்கான (Parentage verification) மைக்ரோ சாட்டிலைட் பகுப்பாய்வு (Micro satellite analysis) மூலமும் குரோமோசோம் பகுப்பாய்வு (chromosome analysis) மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.