TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சமூகத் தணிக்கைச் சட்டம்

December 18 , 2017 2565 days 975 0
  • ஷில்லாங்கில் நடந்த தேசிய மாநாட்டில் மேகாலாயா, “மேகாலாயா சமூகப் பங்களிப்பு மற்றும் பொதுச் சேவைகள் சமூகத் தணிக்கை சட்டம் 2017” என்ற சட்டத்தை நடைமுறைப் படுத்த முடிவு செய்ததன் மூலம் இந்தியாவில் சமூகத் தணிக்கைச் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாகிறது.
  • அரசின் ஒரு வழக்கமாக அதன் நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் தணிக்கை செய்வதற்கு இந்த சட்டம் உறுதுணையாய் இருக்கிறது.
  • இது மேகாலயாவின் முதல் அமைச்சர் முகுல் சங்மாவினால் ஆரம்பிக்கப்பட்டது.
  • அரசின் நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் தணிக்கை செய்வதை அரசாங்கத்தின் ஒரு வழக்கமான நிகழ்ச்சியாக இச்சட்டம் மாற்றுகிறது.
  • இச்சட்டம் ஏற்படுத்தப்படுவதற்கு முன், அரசுத் திட்டங்களின் சமூகத் தணிக்கை குடிமைச் சமூகம் அல்லது சிவில் சமூகங்கள் கொடுத்த அழுத்தத்தினால் நடத்தப்பட்டன. இந்த தணிக்கைகளுக்கு அலுவலக அங்கீகாரம் கிடையாது.
  • மக்களுடன் இணைந்து நேரடியாக தணிக்கையை நடத்துவதற்கு என்று சமூகத் தணிக்கை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார்.
  • அவர் தணிக்கையின் அறிக்கைகளை கிராமசபா முன் சமர்ப்பிப்பார். கிராமசபா தனது பங்களிப்புகளை அந்த அறிக்கையில் சேர்க்கும். இந்த அறிக்கை இறுதியில் தணிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்