TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சிறு நிதிநிலையறிக்கை

January 28 , 2025 3 days 52 0
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 01 ஆம் தேதியன்று மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்ய உள்ளார் என்ற நிலையில் அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் எட்டாவது நிதிநிலை அறிக்கையினை இது குறிக்கிறது.
  • 'சிறு நிதிநிலையறிக்கை' என்பது ஒரு சிறப்பு நிதிநிலை அறிக்கை தாக்கலாகும்.
  • ஒரு தேர்தல் ஆண்டில், பதவிக் காலம் முடிய உள்ள ஒரு அரசாங்கத்தினால் ஏற்கனவே இடைக்கால நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதே ஆண்டில் புதியதொரு அரசாங்கம் மற்றொரு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ள சூழலின் போது இது தாக்கல் செய்யப்படுகிறது.
  • இந்தியாவின் வரலாற்றில் முதல் சிறு நிதிநிலை அறிக்கையானது 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று இந்தியாவின் நான்காவது நிதியமைச்சர் T.T. கிருஷ்ணமாச்சாரி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.
  • பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது சிறு நிதிநிலை அறிக்கையினையும் அவரே தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்