TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பற்று அட்டைகள்

August 18 , 2023 464 days 309 0
  • சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பற்று அட்டைகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய வங்கியாக ஏர்டெல் பண வழங்கீட்டு வங்கி மாறியுள்ளது.
  • இந்தப் பற்று அட்டைகளானது சான்றளிக்கப்பட்டச் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருளான r-PVC எனும் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.
  • உற்பத்தி செய்யப்பட உள்ள 50,000 அட்டைகள் அடங்கிய ஒவ்வொரு உற்பத்தி தொகுதியும், சந்தையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வழக்கமான PVC அட்டைகளின் உற்பத்தியுடன் ஒப்பிடும் போது 350 கிலோகிராம் கார்பன் வெளியேற்றத்தினைக் கணிசமான அளவில் குறைக்கும்.
  • மேலும், r-PVC அட்டைகளின் உற்பத்தியினால் ஹைட்ரோகார்பன் உபயோகமானது 43% குறையும்.
  • இது இந்த மாதிரியான அட்டைகளின் மீதான உற்பத்தியின் போது மேற்கொள்ளப்படும் பெட்ரோலியப் பயன்பாட்டினைத் திறமிக்க வகையில் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்