இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence-AI) மையத்தை மகாராஷ்டிரா அரசு மும்பையில் அமைக்க உள்ளது.
இந்த மையமானது நான்காம் தொழிற்புரட்சியை ஏற்படுத்துவதற்கான முக்கிய மையமாக இருப்பது மட்டுமில்லாமல் தரவுப் பகுப்பாய்வு மற்றும் கண்டுபிடிப்புகளில் மும்பையை முதலீட்டிற்கான இடமாகவும் மேம்படுத்தும்.
இதற்கு முன்பாக மஹாராஷ்டிரா அரசு செயற்கை நுண்ணறிவை சுகாதாரத் துறையில் பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமல்லாமல் மஹாராஷ்டிரா அரசு, கனடா அரசுடன் கூட்டுப் பணிக்குழு (joint working group) ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டுப் பணிக்குழு AI ஒத்துழைப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.