உத்தரப் பிரதேச மாநில அரசானது, லக்னோவில் நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நகரம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் சூழலுக்கு ஒரு முக்கிய இடமளிப்பதனையும் அவற்றை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு நகரம் ஆனது, புதுமையான கருத்தாக்கங்கள் மற்றும் எதிர்காலத் தொழில் வல்லுநர்களின் மேம்பாட்டிற்கான ஒரு படைப்பாக்கக் களமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
லக்னோவின் இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி கல்வி கழகத்தில் அமைந்துள்ள சிறப்பு செயற்கை நுண்ணறிவு மையமானது, 15க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குகிறது.
2022 ஆம் ஆண்டில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சந்தையானது 137 பில்லியன் டாலர் ஆக மதிப்பிடப் பட்டது என்பதோடு மேலும், 2023 முதல் 2030 ஆம் ஆண்டு வரையில் அது 37.3% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் காணும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.