TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தனியார் துறை விண்வெளி வாகன ஏவுதளம்

December 1 , 2022 728 days 577 0
  • சென்னையைச் சேர்ந்த விண்வெளித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இந்தியாவின் முதல் தனியார் துறை ஏவுதளம் மற்றும் ஆய்வுப்பணிக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த மையமானது அக்னிகுல் ஏவுதளம் மற்றும் அக்னிகுல் ஆய்வுப்பணிக் கட்டுப்பாட்டு மையம் ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளதாகும்.
  • ஏவுதளமானது திரவ நிலை எரிபொருள் கொண்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஏவுகலங்களை ஏவுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னையைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனமானது தனது அக்னிபான் ராக்கெட்டை இந்த ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • அக்னிபான் என்பது இரண்டு-நிலைகள் கொண்ட, 100 கிலோகிராம் எடையுள்ள விண்வெளி ஆய்வுப் பொருட்களை 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவித் தாழ் மட்டச் சுற்றுப்பாதை வரை கொண்டு செல்லும் திறன் கொண்ட ஒரு ஏவு வாகனம் ஆகும்.
  • அக்னிபான் ஏவுகலமானது, அந்த நிறுவனத்தின் முப்பரிமாண முறையில் அச்சிடப் பட்ட அக்னிலெட் எந்திரங்களால் இயக்கப்படும்.
  • அக்னிலெட் ஏவுகலம் என்பது, திரவ வடிவ மண்ணெண்ணெய் மற்றும் மீக்குளிர் நிலை கொண்ட திரவ ஆக்சிஜன் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி தன்னைத்தானே உந்துவிக்கின்ற திறன் கொண்ட ஒரு "பகுதியளவு கிரையோஜெனிக் வகை" இயந்திரம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்