TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்

September 1 , 2017 2642 days 3043 0
  • இந்திய அரசின் புதிய கணக்குத் தணிக்கைக் தலைவராக , மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ராஜீவ் மேஹ்ரிஷி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் 13 ஆவது கணக்குத் தணிக்கைக் தலைவர் ஆவார்.
  • இதற்குமுன் இப்பதவியில் இருந்த சஷி கன்ட் ஷர்மா , செப்டம்பர் 25 (2017) அன்று பணி ஓய்வு பெற இருக்கிறார்.
  • இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியை பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அமைப்பாகும் . இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பகுதி 5 இல்,  அத்தியாயம் 5 – சரத்து 7B மற்றும் சரத்து 148 இன் கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும்.
  • அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார். அரசுடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்-பொது பங்களிப்புத் திட்டத்தை(PPP) ஆய்வு செய்யும் அதிகாரம் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு உண்டு
  • தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப்பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொது கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன.
  • இந்திய அதிகார முன்னுரிமைப் பட்டியலில் ஒன்பதாவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்