TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தாமிர வர்த்தக ஒப்பந்தங்கள்

May 29 , 2018 2373 days 755 0
  • இந்தியாவின் மிகப்பெரிய பலசரக்கு பரிமாற்ற வர்த்தக நடைமுறையான மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (Multi Commodity Exchange of India Limited) இந்தியாவின் முதல் தாமிர வர்த்தக ஒப்பந்தங்களை வெளியிட்டுள்ளது.
  • இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் நேரடி சந்தையில் ஈடுபடுவோர்களுக்கு தங்கள் விலை மீதான அபாயத்திற்கு ஒரு கூடுதல் பாதுகாப்பு உபகரணத்தை ஏற்படுத்தும்.
  • ஆப்ஷன்கள் (Options) எனப்படும் வர்த்தகக் குறியீடுகள் எதிர்கால தேதியில் தற்போதைய விலையில் பொருட்களை வாங்குபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ பயன்படும் உபகரணங்கள் ஆகும்.
  • இந்த பரிமாற்ற பரிவர்த்தனை வாரியமானது செபியின் (Security Exchange Board of India) கீழ் ஒப்பந்தங்கள் 1952 ஆம் ஆண்டின் முன்னெடுப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Forward Contracts Regulation Act - 1952) ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது.
  • இந்த பரிவர்த்தனை வாரியமானது தங்கம், இரும்பு மற்றும் இரும்பில்லாத உலோகங்கள், ஆற்றல் மற்றும் குறிப்பிடத்தகு விவசாயப் பொருட்கள் ஆகியவற்றின் மீது யூகபேர வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்