இந்தியாவின் முதல் திறந்த கைபேசி பரிமாற்று மண்டலம் தொடங்கி வைக்கப்பட்டது
July 31 , 2018 2313 days 679 0
நாட்டின் முதல் திறந்த கைபேசி பரிமாற்று மண்டலத்திற்கான (Mobile Open Exchange - MOX) அடிக்கல்லினை இந்தியப் பிரதமர் உத்திரப் பிரதேசத்தின் நொய்டாவில் நாட்டினார்.
மாநிலத்தில் கைபேசி மற்றும் அதன் தொடர்பான துறைகளின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும் Tech Zone-ஐ மேம்படுத்துவதற்காக உத்திரப் பிரதேச முதலீட்டாளர்களின் உச்சி மாநாட்டில் நொய்டாவின் உலக வர்த்தக மையத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உத்தரப் பிரதேச அரசு கையெழுத்திட்டுள்ளது.
MOX ஆனது கைபேசி தயாரிப்பாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R & D - Research and Development) மற்றும் அது தொடர்பான தொழிற்சாலைகளுக்கு ஒருங்கிணைந்த மேடையை வழங்குவதற்காக கைபேசி தொழிற்துறைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ள நடைமுறை ஆகும்.