இந்தியாவில் துளிமத் (குவாண்டம்) தொழில்நுட்பத்தின் மேம்பாட்டினை மிக விரைவு படுத்தச் செய்வதற்காக தேசிய துளிமத் திட்டத்திற்கு இறுதியாக ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.
இந்தத் துறையில் உள்ள பல்வேறு புத்தொழில் நிறுவனங்கள் 10 முதல் 50 கோடி ரூபாய் வரை மானியம் பெறலாம்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 6 கியூபிட்ஸ் திறன் கொண்ட இந்தியாவின் முதல் குவாண்டம் கணினியை அறிமுகப்படுத்தவும் இந்த முன்னெடுப்புத் திட்டமிட்டுள்ளது.
தேசிய துளிமத் திட்டம் ஆனது, இந்தியாவில் துளிமக் கணினியியல் மேம்பாட்டிற்காக சுமார் 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 20-50 கியூபிட்ஸ் கணக்கீடு கொண்ட துளிமக் கணினியை நிறுவுவதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
மேலும், இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50-100 கியூபிட்ஸ்களையும் அடுத்த 10 ஆண்டுகளில் 50-1000 கியூபிட்ஸ்களையும் நிறுவ உள்ளது.