TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம்

December 22 , 2017 2402 days 775 0
  • நாட்டின் பெரும் மனித வளத்தின் திறனை வளர்க்கவும், திறமுடைமையை கட்டமைக்கவும் நாட்டின் முதல் தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகத்தை வதோதராவில் அமைக்க மத்திய இரயில்வே அமைச்சகத்தின் மாற்றுருவாக்கத் திட்டத்திற்கு (Transformative Initiative) மத்திய கேபினேட் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
  • பல்கலைக்கழக மானிய நல்கு ஆணையத்தின் (பல்கலைக்கழகங்களாக கருதப் பெறும் நிறுவனங்களின்) ஒழுங்குமுறை விதிகள் 2016-ன் படி (UGC – Institutions deemed to be Universities - Regulations 2016) புது ஆரம்ப நிலை வகைப்பாட்டின் (De nova Category) கீழ் பல்கலைக்கழகமாக கருதத்தக்க கல்வி நிறுவனமாக இந்த தேசிய இரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்பட உள்ளது.
  • புதிதாகத் தொடங்கிட முன் மொழியப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாக நிறுவனமாக செயல்பட கம்பெனிகள் சட்டம் 2013-ன் பிரிவு 8-ன் கீழ் ஓர் இலாப நோக்கற்ற நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.
  • இந்த நிர்வாக நிறுவனமானது (Managing Company) இப்பல்கலைக்கழகத்திற்கு நிதி மற்றும் உள்கட்டமைப்பு உதவிகளை செய்யும். மேலும் இது பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சார்பு வேந்தரை நியமிக்கும்.
  • பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை உண்டாக்குதல், தொழிற்முனைவுத் தன்மையை வளர்த்தல், தொழிற்நுட்ப வசதிகளை ஒருமுகப்படுத்தி திறன் வளர்த்தல் போன்றவற்றின் மூலம் இந்தியாவின் “ஸ்டார்ட் அப் இந்தியா“ மற்றும் “திறன் இந்தியா“ போன்ற திட்டங்களுக்கு இப்பல்கலைக்கழகம் ஆதரவளிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்