இந்தியாவின் முதல் தொடர் சங்கிலி (Block Chain) மாவட்டம்
August 5 , 2018 2309 days 850 0
இந்தியாவின் முதல் தொடர் சங்கிலி மாவட்டத்தை நிறுவுவதற்காக டெக் மகிந்திரா நிறுவனத்துடன் இணைந்து தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தொலை தொடர்புத்துறை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இவ்வொப்பந்தம், ஹைதராபாத்தில் நடைபெற்ற 2018 சர்வதேச தொடர் சங்கிலி காங்கிரஸ் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது.
நிகரிடை பிணையத்தில் (Peer to Peer Network) தகவல்களை சேமிப்பதற்கான, பரவலாக்கப்பட்ட அழியாத டிஜிட்டல் பதிவேடு என்பதே தொடர் சங்கிலி எனப்படும் பிளாக் செயின் தொழில்நுட்பமாகும்.
இத்தரவு மையம் எண்ணிலடங்கா அளவிற்கு எளிதில் தகவல்களை சேமிக்கும் வண்ணம் நிலையான சேமிப்புகளில் அல்லாமல் மேகக் கணினிகளில் தகவல்களை சேமிக்கின்றது.