மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மனேகா சஞ்சய் காந்தி சகி சுரக்ஷா நவீன DNA தடயவியல் ஆய்வகத்திற்கு (Sakhi Suraksha Advanced DNA Forensic Laboratory) சண்டிகரில் உள்ள மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் வளாகத்தில் (Central Forensic Science Lab) அடிக்கல்லை நாட்டியுள்ளார்.
சரியான நேரத்தில் நீதியை வழங்குவதற்காகப் பெண்கள் தொடர்பான குற்றங்களுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தத் தடயவியல் ஆய்வகமானது இந்தியாவின் முதல் நவீன தடயவியல் ஆய்வகம் ஆகும்.
தற்போது நடப்பில் இந்தியாவில் மொத்தம் 6 மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகங்கள் (Central Forensic Science Labs-CFSLs) உள்ளன. அவை உள்ள இடங்களாவன.
சண்டிகர்
கவுகாத்தி
கொல்கத்தா
ஹைதராபாத்
புனே
போபால்
மேலும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் ஒரு மாநில தடவியல் அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன.
இந்த ஆய்வகங்களானது பாலியல் தாக்குதல், ஆட்கொலை உட்பட அனைத்து வழக்குகளின் தடயவியல் பகுப்பாய்வினை நடத்துவதற்கான பொறுப்புடையதாகும்.
சகி சுரக்ஷா நவீன DNA தடவியல் ஆய்வகத்தில் பெண்கள் தொடர்பான வழக்குகளை மேற்கொள்வதற்காக நான்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
பாலியல் வன்முறை மற்றும் ஆட்கொலைப் பிரிவு (Sexual Assault and Homicide Unit)
மரபுவழி தொடர்புடைய வழக்குகள் (Paternity Unit)
மனித அடையாளம் காணல் பிரிவு (Human Identification Unit)