TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நவீன ஹோமியோபதி வைராலஜி ஆய்வகம் - கொல்கத்தா

September 13 , 2017 2628 days 908 0
  • இந்தியாவின் முதல் நவீன வைராலஜி ஆய்வகம் கல்கத்தாவிலுள்ள டாக்டர். அஞ்சலி சட்டர்ஜி பிராந்திய ஹோமியோபதி நிறுவனத்தில் துவங்கப்பட்டுள்ளது.
  • ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இந்த ஆய்வகம் செயல்பட உள்ளது. பன்றிக்காய்ச்சல், சிக்கன் குனியா, டெங்கு, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் இன்புளூயன்சா போன்ற வைரஸ் நோய்களில் ஹோமிபதியின் வழி அடிப்படை ஆராய்ச்சிகளை (Basic & Fundamental Research) மேற்கொள்ள 8 கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரே ஆய்வு நிறுவனம் இதுவாகும்.
  • இந்த ஆய்வகம் மூலம் வைரஸ் நோய்களினால் பெருகிவரும் சவால்களை களையவும் புது மருந்துகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படும்.
  • ஹோமியோபதியில் உயர்கல்வி (ம) பயிற்சி அளிக்கும் தேசிய ஹோமியோபதி நிறுவனம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்