இந்தியாவின் முதல் நீண்ட தூர வரம்புடைய மீயொலி எறிகணை
November 22 , 2024 2 days 44 0
இந்திய நாடானது பல்வேறு ஆயுதங்களை 1,500 கிலோ மீட்டருக்கு மேலான தொலைவு வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட தனது முதல் நீண்ட தூர வரம்புடைய மீயொலி எறிகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இந்த எறிகணையானது மாக் 6 (ஒலியின் வேகத்தை விட ஆறு மடங்கு) என்ற வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
இந்த வகையானது, "கேரியர் கில்லர்" என்ற புனைப் பெயர் கொண்ட சீனாவின் DF-21D எறிகணைக்குச் சமமான ஆயுத அமைப்பினைக் கொண்ட நாடாக இந்திய நாட்டின் நிலையினை உயர்த்தும்.