TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா

January 4 , 2024 198 days 521 0
  • இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலாவைக் குஜராத் அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
  • இது துவாரகா நகரின் கடற்கரையின் அருகே அமைந்த பெட் துவாரகா என்ற சிறிய தீவினைச் சுற்றியுள்ள கடல்வாழ் உயிரினங்களை காண இது உதவும்.
  • இத்திட்டம் ஆனது டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கான சுற்றுலா திட்டத்தினை போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • சுற்றுலாப் பயணிகள், இந்தத் தீவைச் சுற்றியுள்ள கடல்வாழ் உயிரினங்களை கண்டு களிப்பதற்காக ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கு அடியில் 100 மீட்டர் ஆழம் வரை கொண்டு செல்லப்படுவர்.
  • புராண நூல்களின் கூற்றுப்படி, கிருஷ்ண பகவானால் உருவாக்கப்பட்ட துவாரகா நகரம் இங்கு நீரில் மூழ்கி இருப்பதாக நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்