மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில் ஆனது இந்தியாவின் முதல் பசுமை ஆற்றல் தொல்லியல் தளமாக மாற உள்ளது.
7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ராஜ மல்லன் என்று வெகுவாக அழைக்கப் பட்ட இரண்டாம் நரசிம்ம வர்மனால் கட்டப் பட்ட இந்த யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம் ஆனது தென்னிந்தியாவின் பழமையான கற்கோயில்களில் ஒன்றாகும்.
இந்தக் கடற்கரைக் கோயில் தற்போது தூய்மையான மற்றும் நிலையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட உள்ளது.