TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பன்றி வளர்ப்புப் பள்ளிகள்

July 10 , 2023 376 days 329 0
  • போடோலாந்து பிராந்தியச் சபையானது (BTC), இந்தியாவின் முதல் பன்றி வளர்ப்புப் பள்ளிகளை பெரும்பாலும் ஒரு மையப் படுத்தப்பட்ட அகாடமியுடன் கூடிய வளர்ப்பு மையங்களை அமைப்பதற்காக டென்மார்க் நாட்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மேற் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
  • அசாம் மாநிலத்தில் பூடான் எல்லையை ஒட்டிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய 8,970 சதுர கிலோ மீட்டர் பகுதியை BTC ஆள்கிறது.
  • பன்றி வளர்ப்பு முதல் பன்றி இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பது வரை பன்றி வளர்ப்பின் பல்வேறு முக்கிய அம்சங்களை அறிந்து கொள்வதற்காக 50 விவசாயிகள் டென்மார்க் நாட்டிற்குப் பயணிக்க உள்ளனர்.
  • பன்றி வளர்ப்புப் பள்ளிகள் குறித்தக் கருத்தாக்கமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • அசாம் மாநிலமானது, இந்தியாவில் உள்ள பன்றிகளின் மொத்த எண்ணிக்கையில் 15.89% சதவீதத்தினைக் கொண்டுள்ளது.
  • பன்றி வளர்ப்புப் பள்ளியானது ‘தாலும் லேண்ட்ப்ரூக்ஸ்ஸ்கோல்’ என்ற நாட்டுப்புறப் பள்ளிக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்