RapidX எனப்படும் இந்தியாவின் முதல் பிராந்திய இரயில் சேவையானது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் (RRTS) முன்னுரிமைப் பிரிவின் செயல்பாடுகள் துஹாய் மற்றும் சாஹிபாபாத் இடையே (17-கிலோ மீட்டர் தொலைவு) தொடங்கப்பட்டது.
இதற்கு நமோ பாரத் எனப் பெயரிடப் பட்டது.
டெல்லி-மீரட் வழித்தடத்தின் மொத்த நீளம் ஆனது 82 கிலோமீட்டர் ஆகும் என்ற நிலையில் இந்த இரயில் சேவை மூலம் இதனை ஒரு மணி நேரத்தில் கடந்துவிட முடியும்.
RapidX இரயில் மெட்ரோ இரயில்களைப் போலவே இருக்கும், ஆனால் NCRTC பகிர்ந்துள்ள ஆவணத்தின்படி, RRTS மெட்ரோ இரயிலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
RRTS இரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள நிலையில் இது இந்தியாவின் விரைவான நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்பாக கருதப்படுகிறது.