இந்தியாவின் முதல் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் தன்மை கொண்ட கவச உடை
December 21 , 2024 5 days 48 0
இந்தியாவின் முதல் வகையான பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் தன்மை கொண்ட "கிசான் கவாச்" எனப்படும் கவச உடையானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பூச்சிக்கொல்லி மருந்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கவச உடையானது, சுவாசக் கோளாறுகள், பார்வை இழப்பு மற்றும் தீவிரப் பாதிப்புகளில் மரணம் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கின்ற பூச்சிக்கொல்லி மூலம் தூண்டப்பட்ட நச்சேற்றத்திற்கு எதிரானப் பெரும் பாதுகாப்பை வழங்குகிறது.