TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளர்

December 11 , 2017 2572 days 919 0
  • உலகின் முன்னணி இணைய தேடு பொறியான கூகுள் இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளரான (Photo Journalist) ஹோமய் வியரவல்லாவின் (Homai Vyarawalla) 104-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அவருக்கு சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.
  • “பாம்பே கிரானிகில்“ எனும் பத்திரிக்கையில் இவர் தன் புகைப்படங்களை வெளியிட்டார். டால்டா 13 (Dalda 13) எனும் பெயரிலே தன் பெரும்பான்மையான புகைப்படங்களை இவர்  பத்திரிகைகளில் பிரசுரித்தார்.
  • இந்திய விடுதலை போராட்ட காலத்திலேயே தனக்கென ஓர் இடத்தை புகைப்பட இதழியல் துறையில் பதித்த ஹோமய் வயரவல்லா, தன் புகைப்பட இதழியல் பயணவாழ்வை இரண்டாம் உலகப்போர் சமயத்தில் துவக்கினார்.
  • சுதந்திரமடைந்த பிறகு, இந்தியாவில் முதல் முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றுதல், மவுண்ட் பேட்டன் பிரபு இந்தியாவை விட்டு கிளம்புதல், சுதந்திரத்திற்கு பின் மக்கள் கூட்டத்தில் நேரு உரையாற்றுதல் போன்ற நிகழ்வுகளின் பல புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார்.
  • மேலும் நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2011-ல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்