உலகின் முன்னணி இணைய தேடு பொறியான கூகுள் இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளரான (Photo Journalist) ஹோமய் வியரவல்லாவின் (Homai Vyarawalla) 104-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அவருக்கு சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.
“பாம்பே கிரானிகில்“ எனும் பத்திரிக்கையில் இவர் தன் புகைப்படங்களை வெளியிட்டார். டால்டா 13 (Dalda 13) எனும் பெயரிலே தன் பெரும்பான்மையான புகைப்படங்களை இவர் பத்திரிகைகளில் பிரசுரித்தார்.
இந்திய விடுதலை போராட்ட காலத்திலேயே தனக்கென ஓர் இடத்தை புகைப்பட இதழியல் துறையில் பதித்த ஹோமய் வயரவல்லா, தன் புகைப்பட இதழியல் பயணவாழ்வை இரண்டாம் உலகப்போர் சமயத்தில் துவக்கினார்.
சுதந்திரமடைந்த பிறகு, இந்தியாவில் முதல் முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றுதல், மவுண்ட் பேட்டன் பிரபு இந்தியாவை விட்டு கிளம்புதல், சுதந்திரத்திற்கு பின் மக்கள் கூட்டத்தில் நேரு உரையாற்றுதல் போன்ற நிகழ்வுகளின் பல புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார்.
மேலும் நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2011-ல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.