TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பெண் முஸ்லிம் ஆசிரியை

January 6 , 2023 563 days 326 0
  • இந்தியாவின் முதல் பெண் முஸ்லீம் ஆசிரியை பாத்திமா ஷேக் தற்போது ஆந்திரப் பிரதேச மாநில அரசினால் அங்கீகரிக்கப் பட்டுள்ளார்.
  • எட்டாம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகங்களில் இவரது பங்களிப்பு குறித்த பாடத் திட்டத்தினை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • முந்தைய மகாராஷ்டிரா மாநில அரசும் அதன் பள்ளி பாடத்திட்டத்தில் பாத்திமா ஷேக் அவர்களின் பங்களிப்புகள் பற்றிய விரிவான பாடத் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • பாத்திமா ஷேக், ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு பூனாவில் உள்ள தனது இல்லத்தில் 1848 ஆம் ஆண்டில் அடைக்கலம் கொடுத்ததாக அறியப் படுகிறது.
  • ஷேக், சாவித்ரிபாய் பூலேவுடன் இணைந்து சிந்தியா ஃபரார் நடத்தி வந்த ஒரு கல்வி நிறுவனத்தில் தனது ஆசிரியர் பயிற்சி படிப்பினை நிறைவு செய்தார்.
  • அதன் பிறகு பூலே தம்பதியுடன் சேர்ந்து, அவர் தனது வீட்டிலேயே முதலாவது அனைத்து மகளிர் பள்ளியைத் தொடங்கினார்.
  • பூலே அவர்களால் நடத்தப்பட்ட ஐந்து பள்ளிகளிலும் பாத்திமா ஷேக் ஆசிரியராக பணி புரிந்ததோடு, 1851 ஆம் ஆண்டில் மும்பையில் இரண்டு பள்ளிகளையும் அவர் நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்