TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்

November 16 , 2017 2564 days 2019 0
  • பிரிட்டனின் முதல் இந்திய மாணவி மற்றும் இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞரான கோர்னெலியா சோரப்ஜியின் 151-வது பிறந்த ஆண்டை கொண்டாடும் விதமாக பிரபல இணைய தேடல் பொறியான கூகுள் சிறப்பு டூடுளை (Doodle) ஏற்படுத்தியுள்ளது.
  • 1866-ல் மஹாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் பிறந்த இவர் 1892-ல் பாம்பே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார். மேலும் இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற முதல் இந்தியராவார்.
  • சோரப்ஜி அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் சேர்ந்த முதல் பெண்மணியாவார். “பார்தாஹ்னஷின்”களுடைய (purdahnashins) உரிமைகளுக்காக அயராது போராடினார்.
  • சமூக வழக்கங்கள் காரணமாக, குடும்பத்தை தவிர்த்த பிற ஆண்களுடன் பேச தடை விதிக்கப்பட்ட முகத்திரை அணிந்த பெண்களே பார்தாஹ்னஷின்கள் (Purdahnashins) எனப்படுவர்
  • இந்த டூடுளை ஜஸ்ஜியோத் சிங் ஹன்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்