இந்தியாவின் முதல் பெரிய கடலோரப் பொருளாதார மண்டலத்தை (CEZ – Coastal Economic Zone) மஹாராஷ்டிராவில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முதல் பெரிய வகையிலான CEZ ஆனது வட கொங்கன் பகுதியிலிருந்து மும்பை, தானே, புனே, நாசிக் மற்றும் ராஜ்கார் வரை அமைய உள்ளது.
2016-ல் மத்திய கேபினேட் அமைச்சரவையானது சாகர் மாலா திட்டத்தினுடைய தேசிய முன்னோக்குத் திட்டத்தின் (National Perspective Plan) கீழ் நாடு முழுவதும் 14 பெரிய CEZ மண்டலங்களை அமைக்க ஒப்புதல் வழங்கியது.