TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் முதியோர் ஆணையம்

February 20 , 2025 3 days 57 0
  • கேரளா இந்தியாவின் முதல் முதியோர் ஆணையத்தினை நிறுவ உள்ளது.
  • இது மிக விரைவாக அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகையினால் ஏற்படும் பல சவால்களை நிவர்த்தி செய்வதையும், முதியோர்களின் உரிமைகள், நலன்புரி மற்றும் சமூக ஒருங்கிணைப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் அங்கு சுமார் 12.6 சதவீதமாக இருந்த 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் விகிதம் ஆனது, 2036 ஆம் ஆண்டில் 22.8 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கேரளாவின் முதியோர் மக்கள் தொகை ஆனது ஆண்டிற்கு சுமார் 4 சதவீத விகிதத்தில் அதிகரித்து வருகிறது என்பதோடு 3.3% என்ற தேசிய சராசரியினை விட இது அதிகம் ஆகும்.
  • 2036 ஆம் ஆண்டில் கேரளாவின் முதியோர் மக்கள் தொகையானது 8.4 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த ஆணையம் ஓர் உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் உட்பட குறிப்பிடத் தக்க அதிகாரம் கொண்ட ஒரு சுயாதீன அமைப்பாக செயல்படும்.
  • இது குறைகளை விசாரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்.
  • மாநில அரசாங்கத்தின் செயலாளர் பதவியை வகிக்கும் ஒரு முழு நேரத் தலைவர் தலைமையில் இந்த ஆணையம் செயல்படும்.
  • இதில் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆனது மூன்று ஆண்டுகளாக இருக்கும் என்பதோடு சரியான நேரத்தில் அடுத்தத் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமிக்கப் படாவிட்டால் அவர்களின் பதவிக் காலம் ஆனது ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படும்.
  • கூடுதலாக, இந்த ஆணையத்தில் பட்டியலிடப்பட்டச் சாதியினர் அல்லது பட்டியலிடப் பட்ட பழங்குடியினரைச் சேர்ந்த குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரும் மற்றும் ஒரு பெண் உறுப்பினரும் இருக்க வேண்டும் என்ற நிலையில் இது பல்வேறு சமூகப் பிரிவினரின் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்