இந்தியாவின் முதல் ‘மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டம்’
October 8 , 2018 2241 days 821 0
நம்ருப்-ஐ மையமாகக் கொண்ட அசாம் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் (APL - Assam Petrochemicals Limited) நிறுவனமானது ஆசியாவின் முதலாவது உலோக கொள்கலன் அடிப்படையிலான மற்றும் இந்தியாவின் முதலாவது மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டத்தை அசாமில் தொடங்கியுள்ளது.
இந்த திட்டமானது நிதி ஆயோக் மூலம் ஊக்குவிக்கப்பட்டது.
பாதுகாப்பாக கையாளக்கூடிய உலோக கொள்கலன்கள் அடிப்படையிலான இந்த சமைக்கும் அடுப்புகள் ஸ்வீடன் தொழில்நுட்பத்திடமிருந்து பெறப்பட்டது ஆகும்.
நம்ருப்பைச் சேர்ந்த ரித்து போர்டோலி இந்தியாவின் முதலாவது மெத்தனால் அடிப்படையிலான சமையல் அடுப்பின் உரிமையாளர் மற்றும் பயனாளராக ஆகியுள்ளார்.
இயற்கை எரிவாயுவை ஊட்டுதிறனாகக் கொண்டு மெத்தனால் மற்றும் பார்மாலின் தயாரிக்கும் இந்தியாவில் முதல் பொதுத்துறை உற்பத்தியாளராக APL நிறுவனம் உள்ளது.