யுனெஸ்கோ அமைப்பின் இலக்கிய நகரமாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் நகரமாக கேரளாவின் கோழிக்கோடு நகரம் வரலாறு படைத்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில், கோழிக்கோடு நகரத்தில் அதன் புதிய நிலையைக் கொண்டாடுவதற்கும் மேம்படுத்துவதற்குமான வகையில் தொடர்ச்சியான இலக்கிய மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் நடத்தப்படும்.
மானாஞ்சிரா, தளி, குட்டிச்சிறா போன்ற கேரளாவின் முக்கிய இடங்கள் இலக்கிய நிகழ்வுகளுக்கான செயல்பாடுகள் மிக்க மையங்களாக மாற்றப்படும்.