உலக ரேடியோ தினத்தை (பிப்ரவரி 13) முன்னிட்டு இந்தியாவின் முதல் ரேடியோ திருவிழா யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்களுக்கான சர்வதேச சங்கத்தால் (International Association of Women in Radio and Television) புதுதில்லியில் ஒருங்கிணைக்கப்பட்டது.
உலக ரேடியோ தினத்தின் கருத்துருவான ரேடியோ மற்றும் விளையாட்டு எனும் கருத்துருவைத் தாண்டி சமூக மாற்றத்திற்கான மேடையாக ரேடியோ ஊடகத்திற்கு உள்ள ஆற்றலை ஆராய இத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது.