இந்தியாவின் முதல் மற்றும் ஒரே வடிவமைப்பு பல்கலைக்கழகமான “உலக வடிவமைப்பு பல்கலைக்கழகம் “(World University of Design) ஹரியானாவின் சோனிபட் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பின் ஓம் பிரகாஷ் பன்சால் கல்வியியல் மற்றும் சமூக நல்வாழ்வு அறக்கட்டளையால் இப்பல்கலைக்கழகம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கல்விக்கான நகரமான சோனிபட்டில், தேசிய நெடுஞ்சாலை 1ல் அமைந்துள்ள ராஜீவ் காந்தி கல்வி நகரில் இப்பல்கலைக் கழகம் தற்போது அமைந்துள்ளது.
புத்தாக்க தளத்தினில் (Creative domain) கல்விக்காக முழுவதும் அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் இந்த “வடிவமைப்புக்கான உலக பல்கலைக் கழகம்” ஆகும்.