உத்திரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலியின் ஃபுர்ஸத்கன்ஞ்சில் (Fursatganj) ராஜீவ்காந்தி தேசிய விமானப் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் (Rajiv Gandhi National Aviation University - RGNAU) என்ற இந்தியாவின் முதல் விமானப் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் (Aviation university) விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
விமானப் போக்குவரத்து பற்றிய கல்வியை ஊக்குவிக்கவும் அதில் பயிற்சிகளை வழங்கவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் இது தொடங்கப்பட இருக்கிறது.
இந்த மத்தியப் பல்கலைக்கழகமானது மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தினுடைய நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாகச் செயல்படும்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஓய்வுபெற்ற துணை ஏர்மார்ஷல் நளின் தாண்டன் (Nalin Tandon) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.