நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான அளவு எண்ணெய்யை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதன் மூலம் சவூதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிற்கான முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர் என்ற இடத்தை ஈராக் அடைந்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஈரான் இந்தியாவிற்கு அதிகளவு எண்ணெய் விநியோகிக்கும் மூன்றாவது நாடாக உள்ளது. வெனிசுலாவானது இந்தியாவிற்கு அதிகளவு எண்ணெய் வழங்கும் 4வது நாடாகும்.
அதற்கடுத்த இடத்தில் நைஜீரியா உள்ளது.
இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலம் அடைகின்றது.
நெடுங்காலமாக சவூதி அரேபியா இந்தியாவிற்கு முதன்மை எண்ணெய் வழங்குநராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் மேற்காசியாவிலிருந்தான இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சார்பு நிலை 58 சதவீதத்திலிருந்து (2014-15)7 சதவீதமாக அதிகரித்துள்ளது.