இந்தியாவின் மெட்ரோ இரயில் சேவை வலையமைப்பின் நிலை 2025
January 10 , 2025 12 days 110 0
இந்திய மெட்ரோ இரயில் சேவை அமைப்புகள் 11 மாநிலங்கள் மற்றும் 23 நகரங்களில் 1,000 கிலோ மீட்டர் நீளம் வரைபரவியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் மெட்ரோ இரயில் திட்டங்களில் இந்தியா ஜப்பானை விஞ்சியுள்ளது.
தற்போது, செயல்பாட்டில் உள்ள மெட்ரோ இரயில் வலையமைப்பின் நீளத்தின் மீதான அடிப்படையில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளதோடு உலகின் 2வது பெரிய மெட்ரோ வலையமைப்பாக மாறுவதற்கான முன்னேற்றப் பாதையில் உள்ளது.
1984 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் முதல் மெட்ரோ இரயில் பாதையானது, கொல்கத்தாவில் 3.4 கிலோ மீட்டர் நீளத்தில் எஸ்பிளனேட் மற்றும் பவானிபூர் இடையே திறக்கப்பட்டது.
டெல்லி மெட்ரோ இரயில் கழகம் ஆனது (DMRC) 1995 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
சென்னையின் மெட்ரோ இரயில் கழகமானது 2017 ஆம் ஆண்டில் அதன் பசுமை வழித் தடத்திலான அதன் முதல் நிலத்தடி இரயில் சேவைத் தடத்தின் தொடக்கத்துடன் விரிவு செய்யப்பட்டது.
2020 ஆம் ஆண்டில், இந்தியாவானது தனது முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில் சேவையை டெல்லி மெட்ரோ இரயில் வலையமைப்பின் மெஜந்தா வழித் தடத்தில் அறிமுகப் படுத்தியது.
2021 ஆம் ஆண்டில் நீர்வழியில் மெட்ரோ சேவைத் திட்டத்தினை அறிமுகப் படுத்திய இந்தியாவின் முதல் நகரமாக கேரளாவின் கொச்சி மாறியது.
2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் நீரடி மெட்ரோ இரயில் சுரங்கப் பாதையானது கொல்கத்தாவில் தொடங்கப் பட்டது.