TNPSC Thervupettagam

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி

June 6 , 2023 537 days 314 0
  • 2022-23 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.1% ஆக உள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில், நம் நாட்டின் பொருளாதாரமானது முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டில் முறையே 13.1 சதவீதம், 6.2 சதவீதம் மற்றும் 4.5 சதவீதமாக வளர்ச்சி பெற்றது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரமானது 7.2 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
  • 2022 ஆம் நிதியாண்டில் 3.5% ஆக இருந்த வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் மொத்த மதிப்புக் கூட்டலானது 2022-23 ஆம் நிதியாண்டில் 4% ஆக உயர்ந்து உள்ளது.
  • 2022 ஆம் நிதியாண்டில் 4.7% ஆக இருந்த நிதி, மனை விற்பனை மற்றும் தொழில்முறைச் சேவைகள் ஆனது 2022-23 ஆம் நிதியாண்டில் 7.1% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
  • 2022 ஆம் நிதியாண்டில் 92,583 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் மூலதனத் தேசிய வருமானம் (நிகரம்) ஆனது 2022-23 ஆம் நிதியாண்டில் 98,374 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
  • 2022 ஆம் நிதியாண்டில் 11.1% ஆக இருந்த இந்தியாவின் உற்பத்தித் துறையின் வளர்ச்சி என்பது 2022-23 ஆம் நிதியாண்டில் 1.3% அதிக சரிவைக் கண்டது.
  • 2022 ஆம் நிதியாண்டில் 14.8% ஆக இருந்த கட்டுமானத் துறையின் வளர்ச்சியானது, 2022-23 ஆம் நிதியாண்டில் 10% ஆக குறைந்துள்ளது.
  • 2022 ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 9.1 சதவீதமாக வளர்ச்சி பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்