இந்தியா நான்கு யானைகள் வாழும் பிராந்தியங்களைச் சேர்ந்த 15 மாநிலங்களில் குறைந்தது 150 யானை வழித் தடங்களைக் கொண்டுள்ளது.
மேற்கு வங்காளம் இது போன்ற 26 வழித்தடங்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மத்திய அரசின் 2010 ஆம் ஆண்டு யானைகள் அதிரடிப் படை அறிக்கையானது (கஜா அறிக்கை) நாட்டில் 88 வழித்தடங்கள் இருப்பதாக பட்டியலிட்டுள்ளது.
மொத்த வழித்தடங்களில், 15 பழுதடைந்துள்ளதோடு மேலும் அவற்றின் செயல் பாட்டை மீண்டும் தொடங்க மறுசீரமைப்பு முயற்சிகள் தேவைப்படுகின்றன.
தற்போதுள்ள 18 வழித் தடங்களை யானைகள் பயன்படுத்தச் செய்வது தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
பதிவு செய்யப்பட்ட 150 யானை வழித்தடங்களில் 126 வழித்தடங்கள் மாநிலங்களின் அரசியல் நிர்வாகம் சார்ந்த எல்லைக்குள் அமைந்துள்ள நிலையில் 19 வழித்தடங்கள் இரண்டு மாநிலங்களில் சேர்ந்தவாறு அமைந்துள்ளன.
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே முதன்மையாக உத்தரப் பிரதேசத்தில் ஆறு எல்லை கடந்த வழித் தடங்கள் உள்ளன.