TNPSC Thervupettagam

இந்தியாவின் யானை வழித்தடங்கள் பற்றிய அறிக்கை

September 20 , 2023 304 days 217 0
  • இந்தியா நான்கு யானைகள் வாழும் பிராந்தியங்களைச் சேர்ந்த 15 மாநிலங்களில் குறைந்தது 150 யானை வழித் தடங்களைக் கொண்டுள்ளது.
  • மேற்கு வங்காளம் இது போன்ற 26 வழித்தடங்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • மத்திய அரசின் 2010 ஆம் ஆண்டு யானைகள் அதிரடிப் படை அறிக்கையானது (கஜா அறிக்கை) நாட்டில் 88 வழித்தடங்கள் இருப்பதாக பட்டியலிட்டுள்ளது.
  • மொத்த வழித்தடங்களில், 15 பழுதடைந்துள்ளதோடு மேலும் அவற்றின் செயல் பாட்டை மீண்டும் தொடங்க மறுசீரமைப்பு முயற்சிகள் தேவைப்படுகின்றன.
  • தற்போதுள்ள 18 வழித் தடங்களை யானைகள் பயன்படுத்தச் செய்வது தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
  • பதிவு செய்யப்பட்ட 150 யானை வழித்தடங்களில் 126 வழித்தடங்கள் மாநிலங்களின் அரசியல் நிர்வாகம் சார்ந்த எல்லைக்குள் அமைந்துள்ள நிலையில் 19 வழித்தடங்கள் இரண்டு மாநிலங்களில் சேர்ந்தவாறு அமைந்துள்ளன.
  • இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே முதன்மையாக உத்தரப் பிரதேசத்தில் ஆறு எல்லை கடந்த வழித் தடங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்