தற்போது ஆறு இந்தியத் தளங்களானது, யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய மையத்தினால் இந்தியத் தற்காலிகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.
இதில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முதுமால் பெருங்கற்கால நெடுங்கற்கள் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பண்டேலாக்களின் அரண்மனைக் கோட்டைகள் அடங்கும்.
இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பிற தளங்களில் சத்தீஸ்கரில் உள்ள கங்கர் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, பல்வேறு மாநிலங்களில் மௌரிய வழித்தடங்களில் உள்ள அசோகரின் கல்வெட்டுத் தளங்கள், பல்வேறு மாநிலங்களில் உள்ள சௌசத் யோகினி என்ற கோயில்கள் மற்றும் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள குப்தர் கோயில்கள் ஆகியவை அடங்கும்.
இவற்றுடன், தற்போது தற்காலிகப் பட்டியலில் மொத்த்தம் 62 இந்தியத் தளங்கள் இடம் பெற்று உள்ளன.
தற்போது, இந்தியாவில் இருந்து மொத்தம் 43 தளங்கள் யுனெஸ்கோ அமைப்பின் இந்த உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் 'கலாச்சார' பிரிவில் 35 தளங்களும், 'இயற்கை' பிரிவில் ஏழு தளங்களும் மற்றும் 'கலப்பு' பிரிவில் ஒரு தளமும் அடங்கும்.